ஆக.28 முதல்
ஸ்வயம் ஆன்லைன் தேர்வுகள்
மத்தியக்
கல்வி அமைச்சகத்தின் சார்பில்
‘ஸ்வயம்‘ என்ற இலவச
இணையதளம் மூலம் படிப்புத்
திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலமாக
நாட்டின் எந்தப் பகுதியில்
இருந்தும், யார் வேண்டுமென்றாலும் இணையதளம் வழியாக
இலவசமாகக் கல்வி கற்க
முடியும். அதன்படி, ஸ்வயம்
தளத்தின் படிப்புகளுக்கான தேர்வு
குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு
(யுஜிசி) வெளியிட்ட செய்திக்குறிப்பில்
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஸ்வயம் தளத்தின்
ஜனவரி – ஏப்ரல் மாதத்துக்கான தேர்வு வரும் ஆகஸ்ட்
28 மற்றும் 29-ம் தேதி
நடைபெற உள்ளது. அதன்படி,
தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் https://examform.swayam.gov.in/ என்ற இணையதளம்
வழியாக ஆக.12-ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
ஸ்வயம்
தேர்வு நடைபெறும் தேதிகளில்
பல்கலைக்கழகப் பருவத்
தேர்வுகள் எதுவும் குறுக்கிடாமல் இருக்குமாறு பல்கலைக்கழகங்கள் தங்களின்
தேர்வு அட்டவணையைத் திட்டமிடவேண்டும் என்றும் யுஜிசி
அறிவுறுத்தியுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


