தொழில் முதலீட்டு
கழகத்தின் சிறப்பு கடன்
மேளா
வேலூர்
மாவட்டத்தில் புதிய
தொழில்முனைவோர்கள் தொழில்
முதலீட்டு கழகத்தின் சிறப்பு
கடன் மேளாவில் பங்கேற்று
பயனடை யலாம் என
ஆட்சியர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில்:
தமிழ்நாடு
தொழில் முதலீட்டுக் கழகம்
குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக் கும் பிரிவுகளை விரிவுபடுத்தவும் பல்வேறு சிறப்புத்
திட்டத்தின் கீழ் கடனுதவிகளை வழங்கி வருகிறது.
இதன்
வேலூர் கிளை அலுவலகம்
எண்.73ஏ, காட்பாடி
மெயின் ரோடு, வாசன்
இ.என்.டி
கிளீனிக் முதல் தளம்,
காந்தி நகர், வேலூர்-6
என்ற முகவரியில் இயங்கி
வருகிறது. இங்கு, வரும்
27-ம் தேதி வரை
குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு
தொழில் கடன் மேளா
நடைபெற்று வருகிறது.
இந்த
கடன் மேளாவில் சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங் களுக்கு ஆய்வுக்கட்டணத்தில் 50 சவீதம்
விலக்கு, நீட்ஸ் திட்டத்துக்கு ஆய்வு கட்டணத்தில் இருந்து
விலக்கும் அளிக்கப்படுகிறது. இந்த
வாய்ப்பை புதிய தொழில்
முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


