புதிதாக அரசுப் பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்குச் சென்று அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது
இனி பயிற்சி பெற வேண்டிய அரசு பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
அனைத்து மாவட்டங்களுக்கும் பவானிசாகர் பயிற்சி மையத்தில் இருந்து அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை பயிற்சிகளை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 7 ஆம் தேதி சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதிதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெரும் அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களில் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்குச் சென்று அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி என தமிழ்நாடு மனிதவள மேலாண்மை(பயிற்சி-1) துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


