HomeBlogலோன் வாங்கியவர், லோனை கட்டி முடிப்பதற்குள் இறந்துவிட்டால் என்ன நடக்கும் ??

லோன் வாங்கியவர், லோனை கட்டி முடிப்பதற்குள் இறந்துவிட்டால் என்ன நடக்கும் ??

What happens if the borrower dies before the loan is completed?

லோன் வாங்கியவர், லோனை கட்டி முடிப்பதற்குள் இறந்துவிட்டால் என்ன
நடக்கும்
??

வங்கிகளில் லோன் வாங்குவது சுலபம்
என்றாலும் அதை திருப்பி
செலுத்த வேண்டும் என்ற
பயம் கட்டாயம் அனைவருக்கும் இருக்கும். அதிலும் பெர்சனல்
லோன் என்றால் 2 அல்லது
3
வருடங்களில் முடிந்து விடும்.

ஹோம்
லோன், கார் லோன்
போன்றவை முடிய பாதி
ஆயுளே போய்விடும். காரணம்,
லோன் தொகை சற்று
அதிகமாக இருப்பது தான்.
இருப்பினும் லோன்

வாங்கியவர்களிடம் வட்டியும் அசலும்
வாங்காமல் வங்கி நிர்வாகம்
ஓயாது. இந்நிலையில் இணையதளத்தில் அடிக்கடி கேட்கும் கேள்வியாகவும், பலருக்கும் அவ்வப்போது தோன்றும்
சந்தேகமாகவும் இந்த
கேள்வி உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஒருவேளை
லோன் வாங்கியவர், லோனை
கட்டி முடிப்பதற்குள் இறந்துவிட்டால் என்ன நடக்கும்? என்பது
தான்.

எப்போதுமே
வங்கியில் வழங்கப்படும் கடன்கள்
இரண்டு வகைப்படும். ஒன்று
பாதுகாப்பான கடன். மற்றொன்று
பாதுகாப்பு அற்ற கடன்.
இதில் ஹோம் லோன்,
கார் லோன் போன்றவை
பாதுகாப்பு கடன் வரிசையில்
சேரும். பர்சனல் லோன்
மற்றும் கிரேடிட் கார்டு
கடன் மற்றும் பாதுகாப்பு அற்ற கடன்கள் ஆகும்.
வீட்டுக் கடன் வாங்கியவர் இறந்து விடுகிறார் என்றால்,
இணை விண்ணப்பதாரர் தான்
அந்த கடனுக்கு முழு
பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஒருவேளை அவரும் கடனை
கட்ட மறுத்தால் SARFAESI சட்டத்தின் கீழ், சிவில் நீதி
மன்றம், கடன் மீட்பு
தீர்ப்பாயம் மூலம் வங்கி
நிர்வாகம் வீடு அல்லது
சொத்தை கைப்பற்றும்.பின்பு
அதனை ஏலம் விடுவதன்
மூலம் வங்கிகள் கடனை
திரும்ப பெற்றுக் கொள்ளும்.

அடுத்தது
கார் லோன், இந்த
கடனை திரும்ப செலுத்தும் பொறுப்பு குடும்பத்தினர் மீது
வைக்கப்படும். குடும்பத்தினர் ஒருவேளை தயாராக இல்லை
எனில், வங்கி வாகனத்தினை கையகப்படுத்தி, ஏலம்
விட்டு அதன் மூலம்
தனது கடனை மீட்கும்.
கடைசியாக பார்ப்பது தனிநபர்
கடன். இந்த கடனை
வாங்கிவிட்டு ஒருவர்
இறந்துவிட்டால், வாரிசுகளிடம் திரும்ப செலுத்தும்படி வங்கி
நிர்வாகம் கேட்க முடியாது.
இந்த வகையான கடன்கள்
பாதுகாப்பு அற்ற கடன்கள்
லிஸ்டில் வருவதால் வங்கிகள்
ரைட் ஆப் லிஸ்டில்
சேர்க்கின்றன. 

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!