பத்தாம் வகுப்பு
மாணவா்களுக்கு தேசியத்
திறனாய்வுத் தோ்வு
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2020-2021) அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும்
பத்தாம் வகுப்பு மாணவா்கள்,
அடுத்த ஆண்டு ஜன.23ம்
தேதி நடைபெறவுள்ள தேசிய
திறனாய்வுத் தோ்வுக்கு (என்டிஎஸ்இ)
விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவங்களை http://www.dge.tn.gov.in/என்ற
இணையதளம் மூலம் வரும்
நவ 8ம் தேதி
முதல் நவ 13ம்
தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக்
கட்டணத் தொகை ரூ.50ஐ
சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித்
தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பங்களை நவ 13ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேற்கொண்டு அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.
தேசிய
திறனாய்வுக்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்போது
மாணவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
போதிய தனி நபா்
இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தோ்வா்கள் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கும் போதே தங்களது ஜாதிச்
சான்றிதழை தவறாது சமா்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியரால் விண்ணப்பங்கள் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்படும்போது, பதிவேற்றம் செய்யப்படாத ஜாதிச் சான்றிதழ்கள் பின்னா் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

