சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இலவச
தையல் கலை பயிற்சி – நாமக்கல்
நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெண்களுக்கான இலவச தையல் கலை
பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
வரும்
8ல் துவங்கி, 30 வேலை
நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பயிற்சிக்கு, 35 பேர் மட்டுமே
தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் குறைந்த
பட்சம், 8ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18 – 45 வயதுக்குள் இருக்கவேண்டும்.
பயிற்சிக்கான செலவு, சான்றிதழ், பயிற்சி
பொருட்கள், தேனீர், சிற்றுண்டி, உணவு என அனைத்தும்
இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்பங்களை இந்தியன் வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனம், ரவின்பிளாசா, திருச்சி
சாலை, ரயில்வே மேம்பாலம்
அருகில், நாமக்கல் என்ற
முகவரியில் நாளைக்குள் நேரில்
வந்து பூர்த்தி செய்து
தரவேண்டும்.
விபரங்களுக்கு, 04286 221004, 96989 96424, 8825908170 ஆகிய
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


