வரும் 9ல்
பிளஸ் 1 துணை தேர்வு
ரிசல்ட்
பிளஸ்
1 துணை தேர்வு செப்டம்பரில் நடந்தது. இதன் விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் முடிந்ததால் வரும் 9ம் தேதி
காலை 11 மணிக்கு ரிசல்ட்
வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை
மதிப்பெண் பட்டியலாகவே தெரிந்து
கொள்ளலாம்.அரசு தேர்வு
துறையின் www.dge.tn.gov.in
என்ற இணையதளத்தில், தங்களின்
தேர்வு எண் மற்றும்
பிறந்த தேதியை பதிவு
செய்து மதிப்பெண் பட்டியலை
பதிவிறக்கம் செய்யலாம்.
மாற்றுத்திறனாளி தனி தேர்வர்களுக்கு தேர்ச்சி
வழங்கப்பட்டுள்ளதால், அவர்களும்
தேர்ச்சி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ் 1 துணை
தேர்வுக்கான விடைத்தாள் நகல்
மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், முதன்மை
கல்வி அலுவலர் அலுவலகத்தில் நவ 11, 12ல் நேரில்
சென்று, உரிய கட்டணம்
செலுத்தி பதிவு செய்ய
வேண்டும்.
விடைத்தாள் கேட்கும் தேர்வர்கள் தங்களின்
விடைத்தாள் நகலை அரசு
அறிவிக்கும் நாளில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


