HomeBlogபொறியியல், துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு

பொறியியல், துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு

Consultation for engineering and ancillary medical courses

பொறியியல், துணை
மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு

பொறியியல்
மற்றும் துணை மருத்துவ
படிப்புகளுக்கான முதல்
சுற்று கணினி கலந்தாய்வு நடத்தி சென்டாக் இடங்களை
ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுச்சேரியில் நீட் அல்லாத படிப்புகளான கலை அறிவியல், பொறியியல்,
பாரா மெடிக்கல் மற்றும்
சட்ட படிப்புகளுக்கு சென்டாக்
மூலம் கலந்தாய்வு நடத்தி
இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

புதுச்சேரி அரசு கலை அறிவியல்
கல்லுாரிகளில் உள்ள
படிப்புகளுக்கு முதல்
கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி, மாணவர்களுக்கான இடங்கள்
கடந்த 23ம் தேதி
ஒதுக்கீடு செய்யப்பட்டது.மாணவர்கள்
அந்தந்த கலை அறிவியல்
கல்லுாரிகளில் சேர்ந்து
வருகின்றனர்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்நிலையில், பி.டெக்.பொறியியல்,
பி.எஸ்.சி.,அக்ரி
மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்.சி.,
(
கால்நடை மருத்துவம்), பி.எஸ்.சி.
நர்சிங், பிசியோதெரெபி, எம்.எல்.டி,
எம்.ஆர்..டி.,
பி.பார்ம், பி..எல்.எல்.பி
(5
ஆண்டு சட்டபடிப்பு), டிப்ளமோ
நர்சிங், டிப்ளமோ .என்.எம்.,
டி.எம்.எல்.டி.,
உள்ளிட்ட படிப்புகளுக்கு மொத்தம்
10,435
பேர் விண்ணப்பித்திருந்தனர்.

முதல்
கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி, மாணவர்களுக்கு இடங்கள்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதல்
கட்ட கலந்தாய்வில் இடம்
கிடைத்த மாணவர்களின் பட்டியல்
www.centacpuducherry.in
என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இடங்கள் ஒதுக்கப்பட்ட குறுந்தகவல் மாணவர்களின் மொபைல்
போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள்
சென்டாக் இணைய தளத்திற்கு சென்று, தங்களுக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட இடத்திற்கான ஆணையை
டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

டவுன்லோடு
செய்யப்பட்ட ஆணை மற்றும்
சாதி மற்றும் குடியிருப்பு சான்றிழ்களுடன், இன்று
முதல் வரும் 19ம்
தேதிக்குள், அந்தந்த கல்லுாரி
முதல்வரை அணுகி வகுப்பில்
சேர வேண்டும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular