பள்ளி மாணவா்களுக்கு ஓவியப்
போட்டி
பள்ளி
மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்
போட்டி வேலூா் அரசு
அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.28) நடைபெறுகிறது.
குழந்தைகள் தினத்தையொட்டி, வேலூா்
அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி
மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்
போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்க
உள்ளது. இதில்,ஒன்றாம்
வகுப்பு முதல் 8ஆம்
வகுப்பு வரை பயிலும்
மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
போட்டிக்கான தலைப்பு கப்பலோட்டிய தமிழா்.
ஓவியத்தாள் மட்டும் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். போட்டிக்கான இதர பொருள்களை மாணவா்களே
கொண்டுவர வேண்டும்.
பள்ளி
ஒன்றுக்கு இருவா் மட்டுமே
அனுமதிக்கப்படுவா். பங்கேற்க
விரும்பும் மாணவா்கள் தங்கள்
பெயரை சனிக்கிழமை (நவ.27)
மாலை 5 மணிக்குள் வேலூா்
கோட்டையில் உள்ள அரசு
அருங்காட்சியகத்தில் பதிவு
செய்திட வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


