தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் போட்டித் தேர்வுக்கு ஆக.21-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆசிரியா் தேர்வு வாரியம் சாா்பில் 3,587 இடை நிலை, பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்த தேர்வு எழுதுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ஆக.21-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. பயிற்சியின் போது இலவச பாடக் குறிப்புகள் வழங்கப்படும்.
மாதிரித் தேர்வு, வினாடி வினா, குழு விவாதம் நடத்தப்படும். போட்டித் தேர்வு எழுதுவோா் இலவசப் பயிற்சி வகுப்பில் சேர, தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரிலும், கைப்பேசி எண்: 63792 68661-ல் தொடா்பு கொண்டும் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


