HomeBlogதமிழக அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க அனுமதி - பள்ளிக்கல்வித் துறை...

தமிழக அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க அனுமதி – பள்ளிக்கல்வித் துறை அரசாணை

Permission to temporarily appoint 2,774 postgraduate teachers in Tamil Nadu Government Schools - Govt.

தமிழக அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை
ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க
அனுமதிபள்ளிக்கல்வித் துறை
அரசாணை

அரசுப்
பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர்
காலிப் பணியிடங்களை தற்காலிக
அடிப்படையில் நிரப்பிக்
கொள்ள பள்ளிக்கல்வித் துறை
அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர்காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

நடப்பு
கல்வி ஆண்டில் (2021-2022) அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள
2,774
முதுநிலை ஆசிரியர் காலிப்
பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர்
கழகத்தின் மூலம் நிரப்பிக்
கொள்ள அனுமதி கோரி
பள்ளிக்கல்வி ஆணையர்
கருத்துரு அனுப்பியுள்ளார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அதையேற்று
பள்ளிகளில் காலியாக உள்ள
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தகுதியான பட்டதாரிகள் மூலம்
நிரப்பிக் கொள்ள தலைமை
ஆசிரியர்களுக்கு அனுமதி
வழங்கப்படுகிறது.

அதன்படி
பள்ளியின் தலைமையாசிரியர், உதவித்
தலைமையாசிரியர் மற்றும்
மூத்த முதுநிலை ஆசிரியர்
ஆகியோர் கொண்ட குழு
மூலம் ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்பிக்
கொள்ளலாம்.

அத்தகைய
முதுநிலை ஆசிரியர்கள் 5 மாதங்களுக்கு அல்லது நேரடி நியமனம்
அல்லது பதவி உயர்வு
மூலம் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும் வரை
மட்டும் பணியில் நீடிக்க
வேண்டும்.

தற்காலிக
ஆசிரியர்களுக்கு மாதம்
ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதற்காக
5
மாதங்களுக்கு தேவையான
ரூ.13.87 கோடி நிதியும்
விடுவிக்க ஆணை வழங்கப்படுகிறது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!