தமிழக அரசு
போட்டித் தேர்வுகளில் தமிழ்
பாடத்தாள் கட்டாயம்
தமிழகத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணிபுரிவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (TNPSC) நடத்தும்
போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி
பெறவேண்டியது அவசியமாகும்.
அந்த
வகையில் அரசுத்துறைகளில் இருக்கும்
ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றபடி
குரூப் 1 முதல் குரூப்
4 வரையுள்ள அனைத்து போட்டித்தேர்வுகளையும் TNPSC தேர்வாணையம் நடத்தி
வருகிறது. இந்நிலையில் TNPSC குரூப்
தேர்வுகளில் கலந்து கொள்ளும்
போட்டியாளர்களுக்கு இனி
தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என சட்டமன்ற
பேரவையின் போது அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
தவிர
இந்த TNPSC குரூப் தேர்வுகளில் நடத்தப்படும் தமிழ்
பாடத்தாளில், தேர்வர்கள் குறைந்தபட்சமாக 40 மதிப்பெண்கள் பெற
வேண்டும் என்றும், இந்த
மதிப்பெண்களை பெறும்
போட்டியாளர்களுக்கு மட்டுமே
மற்ற தேர்வுத்தாள்கள் மதிப்பீடு
செய்யப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டது.
அந்த
வகையில் குரூப் 1, 2 மற்றும்
2A ஆகிய இரு நிலைகளை
கொண்ட தேர்வுகளுக்கு தமிழ்
மொழி தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையிலும், குரூப்
3 மற்றும் 4 ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தாள் மட்டுமே
மதிப்பீட்டு தேர்வாக இருக்கும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது,
TNPSC நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ்
பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என
மனிதவள மேலாண்மைத்துறை அரசாணையை
வெளியிட்டுள்ளது. அதன்
கீழ், ஆசிரியர், மருத்துவ
பணியாளர் மற்றும் தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வு
குழுமம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வழிகாட்டு
நெறிமுறைகளை நிதித்துறை வெளியிட்டுள்ளது. அதே போல TNPSC போட்டித்
தேர்வுகளிலும் தமிழ்
மொழி பாடத்தை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

