விவசாயிகளுக்கு மண்
பரிசோதனை பயிற்சி
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில், உலக மண் தினத்தை
முன்னிட்டு, வரும் 5ம்
தேதி காலை 10.30 மணிக்கு
மண் மாதிரி சேகரித்தல், மண் பரிசோதனை மற்றும்
மண் வள மேம்பாடு
குறித்த பயிற்சி நடக்கிறது.
பயிற்சியில் கலந்து கொள்ளும்
விவசாயிகளுக்கு கட்டணம்
கிடையாது.
இலவசமாக
மண் பரிசோதனை செய்து,
மண் வள அட்டை
வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் இருந்து
மண் மாதிரியை சேகரித்து
கொண்டு வரவேண்டும்.
ஆதார்
அட்டை உடன் எடுத்து
வருவது அவசியம்.பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். இதில் கலந்து கொள்ள
விருப்பமுள்ள விவசாயிகள், 94873 74726, 80722 95418 ஆகிய எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

