HomeBlogகான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு - புதுச்சேரி

கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு – புதுச்சேரி

Opportunity to re-apply to apply for constable job

கான்ஸ்டபிள் பணிக்கு
விண்ணப்பிக்க மீண்டும்
விண்ணப்பிக்க வாய்ப்பு

புதுச்சேரி போலீஸ் துறையில் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 2,459 பேர் மீண்டும்
விண்ணப்பிக்க வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.

தகுதியான
விண்ணப்பதாரர்கள் இறுதி
செய்யப்பட்டு, ஜனவரி
மூன்றாவது வாரத்தில் உடல்
தகுதித் தேர்வு நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி போலீஸ் துறையில் 390 கான்ஸ்டபிள், 12 ரேடியோ டெக்னீஷியன், 20 டெக்
கேன்டலர்கள் (படகு ஓட்டுநர்கள்) ஆகிய பணியிடங்களை நிரப்ப,
கடந்த
20.8.2018ல்
அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஆன்லைன்
மூலம் 22.9.2018 வரை
விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல ஆண்டுகளுக்கு பிறகு
போலீஸ் பணியிடம் நிரப்ப
அறிவிப்பு வெளியிடப்பட்டதால், விண்ணப்பதாரர்களின் வயது வரம்பை
22
ல் இருந்து 24 ஆக
உயர்த்த வேண்டும் என
கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில், வயது உச்ச வரம்பை
24
ஆக உயர்த்தி, மீண்டும்
விண்ணப்பங்கள் 9.7.2019 வரை
பெறப்பட்டது. ஆனால், உடனடியாக
உடல் தகுதித் தேர்வு
நடத்தப் படவில்லை.

ஆதி
திராவிடர் நலத்துறை செயலகம்,
கடந்த 22.2.2020 வெளியிட்ட
அரசாணைப்படி, பழங்குடியினருக்கு 0.5 சதவீதம்
இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, 23.6.2020 முதல் பழங்குடி
இனத்தவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.கடந்த ஆண்டு
நவ. 4ம் தேதி
உடற்தகுதி தேர்வு நடத்த
முடிவு செய்து, விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு அனுப்பப்
பட்டது.

கொரோனா
தொற்று பரவல் காரணமாக
உடல்தகுதி தேர்வு நிறுத்தப்பட்டு, மறு அறிவிப்பு வரும்
வரை ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது, விண்ணப்பித்தவர்களுக்கு உடல்
தகுதி தேர்வு நடத்தப்பட
உள்ளது.

உடல்
தகுதித் தேர்வில்சிப்
டைமிங் டெக்னாலஜிபயன்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு மொத்தம்
17,225
பேர் விண்ணப்பித்தனர். இதில்,
2459
விண்ணப்பங்கள் தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டி..ஜி., மிலன்ந் தும்ரே நேற்று அளித்த பேட்டி: போலீஸ்
பணியிட தேர்வுக்கு விண்ணப்பித்து 2,459 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியல், அதற்குரிய காரணத்துடன் புதுச்சேரி போலீஸ் துறையின்
https://police.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களுடைய
குறைகளை நிவர்த்தி செய்து,
தகுந்த ஆவணங்கள் மூலம்
மீண்டும் சமர்ப்பிக்க வாய்ப்பு
வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்கள்
மனுவுடன் தகுந்த சான்றிதழ்களை சேர்த்து, கோரிமேடு காவலர்
பயிற்சி பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ஆள்சேர்ப்பு பிரிவு எஸ்.பி.,யிடம்
ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை 16ம் தேதிக்குள், காலை
9:00
மணி முதல் மாலை
6:00
மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மனுக்கள் குறைதீர்ப்பு கமிட்டி
மூலம் விண்ணப்பங்களை பரிசீலனை
செய்து, முடிவு எடுக்கப்படும்.ஏற்கனவே விண்ணப்பித்து ஏற்றுக்
கொள்ளப்பட்ட 22 பழங்குடியின விண்ணப்பதாரர்கள், தாங்கள் ஏற்கனவே
அனுப்பிய விண்ணப்பத்தின் நகல்,
சான்றிதழ்களை, ஆள்சேர்ப்பு பிரிவு எஸ்.பி.,யிடம்
வரும் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதித்
தேர்வு, 2022ம் ஆண்டு
ஜனவரி மாதம் 3வது
வாரத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்வு
நடைபெறும் இடம் விரைவில்
அறிவிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள், தேர்வுக்காக தங்களை
தயார்செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே
விண்ணப்பித்துள்ள மற்ற
விண்ணப்பத்தாரர்கள் யாரும்
மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே
மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.தகுதியான
விண்ணப்பதாரர்கள் பட்டியல்
வெளியிடப்பட்டு, உடல்
தகுதிக்கான தேர்வு அட்டவணை
வெளியிடப்படும்.இவ்வாறு
அவர் கூறினார்.

பேட்டியின்போது போலீஸ் தலைமையக சீனியர்
எஸ்.பி., பிரதிக்ஷா
கோடரா, எஸ்.பி.,க்கள்
மோகன்குமார், செல்வம் உடனிருந்தனர்.உதவி மையம்விண்ணப்பதாரர்களின் நலன்
கருதி, கோரிமேடு போலீஸ்
பயிற்சிப் பள்ளி வளாகத்தில், ஆள்சேர்ப்பு பிரிவு எஸ்.பி.,
அலுவலகத்தில் உதவி
மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 0413 2277900 என்ற
தொலைபேசியில் காலை
9
மணி முதல் 6 மணி
வரை தொடர்பு கொண்டு
விபரம் கேட்டு பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!