மோட்டார் பொருத்திய
இலவச தையல் இயந்திரங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022ஆம்
நிதியாண்டுக்கு, கைகள்
மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காது
கேளாத மற்றும் வாய்
பேச இயலாதோர், மிதமான
மனவளா்ச்சி குன்றியவா்கள் மற்றும்
75 சதவீதத்திற்கு மேல்
பாதிக்கப்பட்ட மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் தாய்மார்களுக்கு இலவச மோட்டார் பொருத்திய
தையல் இயந்திரம் வழங்கும்
திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி
18 முதல் 45 வயதுக்குள்பட்ட தையல்
பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதம்
மனவளா்ச்சி குன்றியோரின் தாய்மார்கள் இத்திட்டத்தில் பயன்பெற
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய
அடையாள அட்டை நகல்,
ஆதார் அட்டை நகல்,
தையல் பயிற்சி சான்று,
குடும்ப அட்டை நகல்
ஆகியவற்றுடன் மாவட்ட
மாற்றத்திறனாளிகள் நல
அலுவலகத்தில் டிச
20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கூடுதல்
விபரங்களுக்கு 0451-2460099 என்ற
எண்ணில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

