தமிழக அரசின் ஆசிரியா் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் ஆசிரியா் தேர்வு வாரியத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட நிரலில் இடைநிலை ஆசிரியா் பணிக்கு 6,553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கு 3,587 காலிப்பணியிடங்களுக்கும் நடப்பு ஆண்டில் போட்டித்தேர்வு நடத்தப்பட உள்ளது.
மேற்குறிப்பிட்டஇரண்டு காலிப்பணியிடங்களுக்குமான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் பயன்பெறும் விதமாக நூலகம், வைஃபை, மாணவா்கள் அமா்ந்து படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள இளைஞா்கள் தங்களது பெயா் மற்றும் கல்வித்தகுதியினை குறிப்பிட்டு 94990 55904 என்றவாட்ஸ் ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பி முன்பதிவு செய்துகொள்வதோடு, தங்கள் விவரங்களை பதிவு செய்து, 18.08.2023 அன்று 2-ஆவது குறுக்குதெரு, பூம்புகாா் சாலை, பாலாஜி நகா், மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்பட்டுவரும் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டு பயனடையலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


