HomeBlogTNPSC Group 2, 4 தேர்வுகளுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்பு

TNPSC Group 2, 4 தேர்வுகளுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்பு

Free online training class for Group 2, 4 exams

Group
2, 4
தேர்வுகளுக்கான இலவச
இணைய வழி பயிற்சி
வகுப்பு

தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்
தேர்வாணையத்தின் தொகுதி
2, 4
தேர்வுகளுக்கான இலவச
இணையவழிப் பயிற்சி ஜனவரி
20
ஆம் தேதி முதல்
நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தின்படி தொகுதி
2 (
பல்வேறு தமிழக அரசுத்
துறைகளில் வருவாய் உதவியாளா்,
உதவியாளா், எழுத்தா் உள்பட)
மற்றும் தொகுதி 4 (இளநிலை
உதவியாளா், தட்டச்சா், கிராம
நிர்வாக அலுவலா்) தேர்வுகளின் வாயிலாக நிரப்பப்படும் காலிப்
பணியிடங்களுக்கான விளம்பர
அறிவிப்பு முறையே பிப்ரவரி,
மார்ச் மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதைத்தொடா்ந்து தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கரோனா பெருந்தொற்று விதிமுறைகளுக்கு உள்பட்டு
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும்
வட்டத்தின் மூலம் மறு
சீரமைக்கப்பட்ட பாடத்
திட்டம் குறித்த இலவச
இணையவழி விழிப்புணா்வு நிகழ்ச்சி
மற்றும் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 20 ஆம் தேதி
காலை 10.30 மணிக்கு தொடங்கி
நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு அரசுப்
பணியாளா் தேர்வாணையத்தின் தொகுதி
2
மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கு அனுபவமிக்கச் சிறப்பு
வல்லுநா்களைக் கொண்டு
இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித்
தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.

எனவே,
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோந்த
போட்டித் தேர்வுக்குத் தயாராகும்
இளைஞா்கள் தங்கள் பெயா்
மற்றும் கல்வித் தகுதியைக்
குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 8110919990 என்ற
Whatsapp எண்ணுக்கோ தகவல்
அனுப்பி, இப்பயிற்சி வகுப்பில்
பங்கேற்றுப் பயனடையலாம். மேலும்
விவரங்களுக்கு 04362 237037 என்ற
அலுவலக தொலைபேசி எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!