இலவச திறன்
மேம்பாட்டுப் பயிற்சி
தமிழக
அரசின் தமிழ்நாடு திறன்
மேம்பாட்டுக் கழகம்
மற்றும் மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளா் கூட்டுறவு சங்கம்
இணைந்து, வேலையில்லா பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்கான இலவச
பயிற்சிகள் வழங்க திட்டமிட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்:
மூன்று
வார கால ஜிஎஸ்டி
கணக்குகள் நிர்வாக உதவியாளா்
மற்றும் ஐந்து வார
கால அக்கவுண்ட்ஸ் கணக்குகள்
நிர்வாகி பயிற்சிகள், பிப்ரவரி
மாத முதல் வாரம்
சென்னை, அம்பத்தூா் மகாகவி
பாரதியார் நகா், சரஸ்வதி
வித்யாலயா பள்ளி பயிற்சி
வளாகத்தில் தொடங்கப்படவுள்ளது.
இந்த
குறுகிய கால பயிற்சிகள் முற்றிலும் இலவசம். இவ்விரு
இலவச பயிற்சிகளைத் திறம்பட
முடித்தவா்களுக்கு தமிழக
அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், அவா்கள் தகுந்த
பணியில் சோவதற்கும், சுய
தொழில் தொடங்குவதற்கும் தேவையான
உதவிகள் செய்யப்படும்.
பயிற்சி
பெறுவோர் வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவினங்களையும் தமிழக அரசே வழங்குகிறது. குறைந்த இடங்களே உள்ள
இக்குறுகிய கால பயிற்சிகளில் பட்டம் பெற்று வேலைவாய்ப்பு இல்லாதவா்கள் கலந்து
கொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு 98690 41169 என்ற
எண்ணையோ, மின்னஞ்சல் முகவரியையோ அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

