வெல்டர், பிட்டர்,
எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட் இலவச பயிற்சி
இது குறித்து, சென்னையில் உள்ள, ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய
அரசின் இலவச தொழிற்
பயிற்சி திட்டத்தில் இளைஞர்கள்,
பெண்களுக்கு சென்னையில் உள்ள
ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்., ல், மூன்று வாரங்கள்
இலவச தொழிற் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் வெல்டர், பிட்டர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர், வெல்டர்
டிரேடில் பயிற்சிகளில், 65 பேர்
சேரலாம்.பயிற்சியில் சேர்வதற்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். 18 முதல்
35 வயது வரை உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே
பெறப்படும். வரும் 21ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு,
http://www.indianrail.gov.in/ முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.