HomeBlogதிருப்பூர் மாவட்டத்தில் நீரிழிவு, ரத்த அழுத்த சோதனை – சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் நீரிழிவு, ரத்த அழுத்த சோதனை – சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் நீரிழிவு, ரத்த அழுத்த
சோதனைசிறப்பு மருத்துவ முகாம்

பொது
சுகாதாரத்துறை வாயிலாக,
30
வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த
அழுத்தம், நீரிழிவு பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டு, தேவையான
தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது.கொரோனா பரவல்
அதிகரித்ததால், ஒரே
இடத்தில் கூட்ட நெரிசல்
ஏற்படுவதை தடுக்க, மேற்கண்ட
முகாம்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், தொற்று
பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், மீண்டும் ஆரம்ப சுகாதார
நிலையம், துணை நிலையங்களில் சிறப்பு முகாம் நடத்த
சுகாதாரத்துறை உத்தரவு
பிறப்பித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள,
67
ஆரம்ப சுகாதார நிலையம்,
அதன் கீழ் செயல்படும் துணை நிலையங்களில் வரும்,
10
ம் தேதி முதல்
முகாம் துவங்குகிறது.

மார்ச்
31
ம் தேதி வரை
ஒவ்வொரு வாரமும் வியாழன்
மற்றும் சனிக்கிழமை சர்க்கரை,
ரத்தபரிசோதனை இலவச
முகாம் நடக்கும்.

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:

சர்க்கரை,
ரத்த அழுத்த நோய்க்கு
ஆளாகிறவர் எண்ணிக்கையை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கு தக்க
மருந்து, எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமாக வாழலாம்.

மக்கள்
அனைவரும் தங்கள் உடல்நிலையை தெரிந்து கொள்ள ஏதுவாக
வாரத்தின் இரு நாட்கள்
(
வியாழன், சனிக்கிழமை) முகாம்
நடத்தப்படுகிறது.

இதில்,
30
வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்று,
தங்கள் உடல்நிலை குறித்து
அறிந்து கொள்ளலாம். டாக்டர்
ஆலோசனை பெற்று அதற்கேற்ப
உணவு முறைகளை மாற்றிக்
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular