TANCET தேர்வு –
வரும் 30ம் தேதி
முதல் ஆன்லைன் மூலம்
விண்ணப்பம்
தமிழ்நாடு
பொது நுழைவுத் தேர்வு
(TANCET) தேர்வு எழுதுவதற்கு வரும்
மார்ச் 30ம் தேதி
முதல் ஏப்ரல் 18ம்
தேதி மாலை 4 மணி
வரை ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம் என
அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:
அண்ணா
பல்கலைக்கழகத்தின் துறைகள்,
அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணா
பல்கலைக்கழகத்தின் மண்டல
கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு
உதவிப்பெறும் சுயநிதி
பொறியியல், கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் உள்ள
எம்.பி.ஏ,
எம்.சி.ஏ,
எம்.இ, எம்.டெக்,
எம்.ஆர்க், எம்.பிளான்
ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2022-2023ம்
கல்வியாண்டில் சேரலாம்.
மேலும்
சில பல்கலைக்கழகம் மற்றும்
தனியார் கல்லூரிகள் டான்செட்
மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள்
சேரலாம்.
எம்.பி.ஏ,
எம்.சி.ஏ
மற்றும் எம்.இ,
எம்.டெக், எம்.ஆர்க்,
எம்.பிளான் ஆகிய
பட்டப் படிப்பிற்கான ( TAMIL NADU
COMMON ENTRANCE TEST – TANCET ) நுழைவுத் தேர்வினை
எழுதுவதற்கு மார்ச்30 ஆம்
தேதி முதல் ஏப்ரல்
18ஆம் தேதிவரை https://tancet.annauniv.edu/tancet/
என்ற இணையதளத்தில் ஆன்லைன்
மூலம் விண்ணப்பிக்கலாம், மேலும்
விபரங்களை இந்த இணையதளத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில்
விண்ணப்பம் செய்யும்போது மாணவர்கள்
பயன்படுத்தும் மின்னஞ்சல், செல்போன் எண்ணை பயன்படுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன்
மூலம் மட்டுமே செலுத்த
வேண்டும்.
இவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு மே
2-ம் தேதி வெளியிடப்படும். எம்.சி.ஏ.
படிப்பிற்கு மே 14ம்
தேதி காலை 10 மணி
முதல் 12 மணி வரையும்,
எம்.பி.ஏ.படிப்பிற்கு மே 14ம் தேதி
மதியம் 2.30 மணி முதல்
4.30 மணி வரையும், எம்.இ,
எம்.டெக், எம்.ஆர்க்,
எம்.பிளான் படிப்பிற்கு மே 15ம் தேதி
காலை 10 மணி முதல்
12 மணிவரை நுழைவுத் தேர்வு
நடைபெறும்.
தேர்வு
சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம்,
திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம்,
தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி,
வேலூர், விழுப்புரம் ஆகிய
14 நகரங்களில் தேர்வு நடத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


