TNPSC., குரூப்
4 போட்டித்
தேர்வுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தேர்வு எழுத
உள்ள நபர்களுக்கு, மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டு
மையம் வாயிலாக, வார
இறுதி நாட்களில் இலவச
பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
TNPSC.,
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதில்,
வி.ஏ.ஓ.,
இளநிலை உதவியாளர், தட்டச்சர்,
வரி வசூலர், ஸ்டெனோ
உள்ளிட்ட மொத்தம், 7 ஆயிரத்து,
301 பணி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இத்தேர்வுக்கு, www.tnpsc.gov.in என்ற
இணையதளம் வாயிலாக வரும்
28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை,
24ம் தேதி தேர்வு
நாள்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி,
வெற்றி பெற ஏதுவாக,
மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில் நெறி
வழிகாட்டு மையம் சார்பில்,
வார இறுதி நாட்களில்
நேரடியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
TNPSC.,
தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்துடன், இந்த அறிமுக வகுப்பில்
பங்கேற்று, பயிற்சி வகுப்புகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
இலவச பயிற்சி வகுப்பில்,
பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன், குழுவிவாதம், பாடவாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரி
தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வில்
தேர்ச்சி பெற, அனைத்து
ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும்,
https://tamilnaducareerservices.tn.gov.in
என்ற இணையதளத்தை மாணவர்கள்
பார்வையிட்டு, கூடுதல்
தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


