நாளை அரியலூரில் குரூப் 4 தேர்வுக்கான இலவச
வகுப்பு தொடக்கம்
அரியலூரில் வியாழக்கிழமை (ஏப்.7)
குரூப்-4 தேர்வுக்கான இலவசப்
பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பெ. வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னாா்வ
பயிலும் வட்டம் வாயிலாக
போட்டித் தேர்வுகளுக்கான இலவசப்
பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in/ ல்(TNPSC, TNUSRB, IBPS, SSC, RRB & UPSC )போன்ற பல்வேறு போட்டித்தோவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் இடம் பெற்றுள்ளன.
TNUSRB & TNPSC–ஆல்
அறிவிக்கப்பட்டுள்ள காலி
பணியிடங்களுக்கான இலவச
பயிற்சி வகுப்பு 07.04.2022 முதல்
நடைபெற உள்ளது. இலவச
பாடக் குறிப்புகள் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்பும் அரியலூா் மாவட்ட இளைஞா்கள்
விண்ணப்ப நகல்களுடன் அரியலூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை
நேரில் தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


