எஸ்.ஐ.
பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
எஸ்.ஐ.
பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. உதவி
ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்
ஏப்ரல் 17ம் தேதி
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.
பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன்
அவகாசம் முடியும் நிலையில்
மேலும் 10 நாட்கள் அவகாசம்
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. காவல்
துறைக்கு புதிதாக 444 எஸ்.ஐ.க்கள்
தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதற்கு ஏப். 7 வரை
விண்ணப்பிக் கலாம் என
அறிவிக்கப்பட்டிருந்தது. சீருடை
பணியாளர் தேர்வு வாரியம்
வாயிலாக, காவல் துறையில்
காலியாக உள்ள, 444 எஸ்.ஐ.,
பணியிடங்களுக்கு, ஆண்கள்,
பெண்கள், திருநங்கையர் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதற்கான
அறிவிப்பு நேற்று வெளியானது.
விண்ணப்பங்கள், https://www.tnusrb.tn.gov.in/ என்ற
இணையதளம் வாயிலாக மட்டுமே
வரவேற்கப்படுகின்றன.
வயது
கல்வித்தகுதி மற்றும்
இட ஒதுக்கீடு உள்ளிட்ட
விபரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியான
நபர்களுக்கு எழுத்து தேர்வு,
சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி
மற்றும் நேர்முக தேர்வுகள்
நடக்க உள்ளன.
முதன்
முறையாக, 100 மதிப்பெண்களுக்கு தமிழ்மொழி
தகுதி தேர்வு நடக்க
உள்ளது. இதில், விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என
கூறப்பட்டிருந்தது. எழுத்து
தேர்வுக்கான தேதி பின்னர்
அறிவிக்கப்படும் என
சீருடை பணியாளர் தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


