தேர்வு நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து
நாளை ஆலோசனை – TNPSC
TNPSC தேர்வு நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து
நாளை ஆலோசனை நடைபெற
இருக்கிறது.
தமிழக
அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட
அனைத்து நிலைகளுக்கும் TNPSC தேர்வாணையம் வழியாக தேர்வு
நடத்தப்பட்டு பணி
நியமனம் செய்யப்படுகிறது.
இது
தேர்வாணையத்தின் பணி
நியமன நடவடிக்கைகள் மற்றும்
அரசின் கொள்கை முடிவுகளில் அடிப்படையில் அவ்வப்போது மாற்றப்படும்.
இதன்படி
தேர்வு நடைமுறையில் அண்மையில்
சில மாற்றங்கள் கொண்டு
வரப்பட்டன.
மேலும்,
எதிர்காலத்தில் மேற்கொள்ள
வேண்டிய மாற்றங்கள் குறித்து
விவாதிக்க நாளை தேர்வாணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற
உள்ளது. இந்த ஆலோசனையில், பிற மதங்களில் இருந்து
மாறுவோருக்கு பணி
நியமனத்தில் இட ஒதுக்கீடு
முறை எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்தும், முதல் தலைமுறையாக இஸ்லாமியராக மாறியவர்களுக்கு இட
ஒதுக்கீடு வழங்க முடியுமா
என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த
ஆலோசனைக் கூட்டம் டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில்,
6 தேர்வாணைய உறுப்பினர்கள், TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி
மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரன் குராலா
உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


