முதுநிலை ஆசிரியா்
தேர்வு விடைக் குறிப்பு
– ஆட்சேபனை தெரிவிக்க ஏப்.13
கடைசி
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பு
வெளியாகியுள்ள நிலையில்
தேர்வா்கள் வரும் 13ம்
தேதி வரையில் ஆட்சேபனை
தெரிவிக்கலாம் என
ஆசிரியா் தேர்வு வாரியம்
தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
2020-2021ம்
ஆண்டில் முதுநிலை பட்டதாரி
ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா்,
கணினி பயிற்றுநா் பணிகளுக்கு நேரடி நியமனத்துக்கான தேர்வு
கடந்த பிப்ரவரி மாதம்
12ம் தேதி முதல்
20ம் தேதி வரை
இணையவழியில் நடைபெற்றது. இந்த
தேர்வினை 2 லட்சத்து 13 ஆயிரத்து
893 போ எழுதினா்.
இந்த
நிலையில், தேர்வா்கள், வினாத்தாள் மற்றும் பதிலளித்த விடைகள்
ஆசிரியா் தேர்வு வாரிய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன்
தேர்வுக்கான தற்காலிக உத்தேச
விடை குறிப்புகளும் அனைத்து
பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன.
விடைக்
குறிப்பின் மீது தேர்வுகளுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால்
உரிய வழிமுறைகளைப் பின்பற்றி
இணையதளம் மூலம் 13ம்
தேதி மாலை 5.30 மணிக்குள்
உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பாடப்
புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள், ஆதாரம் இருந்தால் மட்டுமே
தெரிவிக்க வேண்டும்.
கையேடுகள்
மற்றும் தொலைநிலைக் கல்வி
நிறுவன வெளியீடுகள், ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தபால்
அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அவை
நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும் பாட வல்லுனா்களின் முடிவே இறுதியானது.