தொழில் பழகுநர்
பயிற்சிக்கான சேர்க்கை
முகாம்
காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட
செய்திக்குறிப்பு:தமிழ்நாடு
அரசு வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை, பயிற்சிப்
பிரிவின் சார்பில், தொழில்
நிறுவனங்களுடன் இணைந்து,
மாவட்ட அளவிலான தொழில்
பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை
முகாம் நடக்கிறது.
வரும்,
21ல், காஞ்சிபுரம் மாவட்டம்,
ஒரகடம் அரசு தொழிற்
பயிற்சி நிலையத்தில் காலை
10.00 மணி முதல் மாலை
3.00 மணி வரை நடக்கும்
முகாமில், ஐ.டி.ஐ.,
தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்
எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி.,
பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி,
தோல்வி அடைந்தோர் பங்கேற்கலாம்.விபரங்களுக்கு, 044 2989 4560
என்ற தொலைபேசி எண்ணை
அழைக்கலாம்.