பத்தாம் வகுப்பு
தனி தேர்வர்களுக்கு அறிவியல்
செய்முறை தேர்வு அறிவிப்பு
பத்தாம்
வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்
தேர்வர்களுக்கு, அறிவியல்
செய்முறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வு துறை இயக்குனர் அறிவிப்பு:
பத்தாம்
வகுப்பு பொது தேர்வில்,
அறிவியல் பாட செய்முறை
தேர்வு வரும், 27ம்
தேதி முதல், 29 வரை
நடக்கிறது. மே மாதம்
நடக்கும் பொது தேர்வை
எழுத உள்ள தனி
தேர்வர்களும், ஏற்கனவே
எழுதி தேர்ச்சி பெறாதவர்களும், இந்த செய்முறை தேர்வில்
பங்கேற்க வேண்டும்.
அறிவியல்
செய்முறை பயிற்சி வகுப்புகள் நடந்த பள்ளிகளிலேயே, செய்முறை
தேர்வும் நடத்தப்பட உள்ளது.