ஆச்சாரியா கல்விக்
குழுமம் சார்பில் நீட்
பயிற்சி
ஆச்சாரியா
கல்விக் குழுமம் சார்பில்,
ஜூன் 1ம் தேதி
முதல் துவங்க உள்ள
‘நீட்‘ தேர்விற்கான சிறப்பு
பயிற்சி வகுப்பிற்கு மாணவர்கள்
பெயர் பதிவு வரவேற்கப்படுகிறது.
ஆச்சாரியா
கல்விக் குழுமத் தலைவர்
அரவிந்தன் விடுத்துள்ள அறிக்கை:ஆச்சாரியா
மற்றும் வெற்றி கோச்சிங்
சென்டர் இணைந்து, ‘நீட்‘
நுழைவுத் தேர்விற்கான சிறப்பு
பயிற்சி வகுப்பு நடத்தப்பட
உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு, ஜூன் 1ம்
தேதி முதல் புதுச்சேரி, தேங்காய்திட்டு, ஆச்சாரியா
பாலசிக் ஷா மந்திர்
மையத்தில் நடைபெறும்.பயிற்சி
வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள், வரும் 24ம்
தேதி நடைபெறவுள்ள தகுதித்
தேர்வை எழுத வேண்டும்.
இத்தேர்வில் முதல் 20 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் இலவசமாக பயிற்சி
பெறலாம். 20 முதல் 30 ஆண்டுகள்
அனுவபமுள்ள பேராசிரியர்களை கொண்டு
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தினசரி
2 யூனிட் டெஸ்ட் மற்றும்
வகுப்பு நடைபெறும்.
வார
இறுதியில் ‘நீட்‘ மாடல்
தேர்வு நடைபெறும். பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் இலவச மடிக்கணினி வழங்கப்படும். அதில்
சி.பி.எஸ்.இ.,
மற்றும் சமச்சீர் பாடங்கள்
பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
வெற்றி கோச்சிங் சென்டரின்
இணையதளத்தில் 200 வீடியோ
வகுப்புகள், 200 ஆன்லைன் யூனிட்
டெஸ்ட் கொடுக்கப்படும்.
ஒவ்வொரு
யூனிட்டிலும் இரண்டு
டெஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும். தேர்வு
எழுதிய உடன் மதிப்பெண்
திரையில் தோன்றும். ஒவ்வொரு
வினாவிற்கும் மாணவர்
அளித்த பதில் சரியா,
தவறா என்பதை அறியும்
வசதி உள்ளது. இந்த
வசதி எந்த முன்னணி
ஆன்லைன் பயிற்சி வகுப்புகளிலும் இல்லை.
பயிற்சி
வகுப்பில் சேர்வதற்கான பெயர்
பதிவு மற்றும் பிற
விபரங்களுக்கு, 93444 97456
என்ற மொபைல் எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


