கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஈரோட்டில்
நான்கு நாட்கள் நேர்காணல்
ஈரோடு
மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள,
19 கால்நடை பராமரிப்பு உதவியாளர்
பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பித்தோருக்கு வரும், 26ம்
தேதி முதல், 29ம்
தேதி வரை நான்கு
நாட்கள் நேர்காணல் தேர்வு
நடக்க உள்ளது.
ஈரோடு,
ஸ்டேட் பாங்க் சாலையில்
உள்ள கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர்
அலுவலக வளாகத்தில், தினமும்
காலை, 9.30 மணி முதல்
மாலை, 5.30 மணி வரை
நேர்காணல் நடக்கிறது. தகுதி
உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, நேர்காணலுக்கான அழைப்பாணை அனுப்பி உள்ளனர்.
அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ள நாள்,
நேரத்தில் அழைப்பாணை கடிதத்துடன், அனைத்து அசல் சான்றுகள்,
முன்னுரிமை சான்றிதழ்களுடன் பங்கேற்க
வேண்டும்.அழைப்பாணை கிடைக்காதவர்கள், உரிய ஆதாரத்துடன் ஈரோடு
மண்டல இணை இயக்குனர்
அலுவலகத்தை நேரில் அணுகி,
நேர்காணலுக்கான அழைப்பாணை
நகலை பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



8248821395 . Whatsapp job