திருத்தப்பட்ட தேர்வு
பட்டியல் வெளியீடு – முதுகலை ஆசிரியர் தேர்வு
கடந்த
2019ம் ஆண்டு நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்
தேர்வில் வணிகவியல், வரலாறு
பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர்
தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
2018-2019-ம்
ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி
ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்
(கிரேடு-1) காலியிடங்களை நிரப்பும்
பொருட்டு ஆசிரியர் தேர்வு
வாரியம் 2019ம் ஆண்டு
செப்.27 முதல் 29ம்
தேதி வரை கணினிவழி
போட்டித் தேர்வை நடத்தியது.
அதன் முடிவுகள் 2019 அக்.
18 மற்றும் 21ம் தேதி
வெளியிடப்பட்டன.
இதைதொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு 2019 நவ.
8 மற்றும் 9-ம் தேதி
நடத்தப்பட்டு, பாட
வாரியாக தேர்வுபட்டியல் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தற்போது நீதிமன்ற
உத்தரவின்படி, வணிகவியல்
மற்றும் வரலாறு பாடங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வு
பட்டியலை ஆசிரியர் தேர்வு
வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


