வேலைவாய்ப்பற்ற தகுதி
வாய்ந்த இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – நீலகிரி
நீலகிரி
மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்து 5 ஆண்டுகள் மற்றும்
அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200ம்,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்களுக்கு ரூ.300ம்,
பிளஸ்2 தேர்ச்சி மற்றும்
அதற்கு சமமான தகுதி
உள்ளவர்கள் ரூ.400ம்,
பட்டதாரிகள் மற்றும் முதுநிலை
பட்டதாரிகளுக்கு ரூ.600ம்
வழங்கப்படும்.
இதற்கு
31.03.2022 அன்று வேலைவாய்ப்பு பதிவு
செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர
வகுப்பினருக்கு வயது
வரம்பு 40க்குள் இருக்க
வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து
புதுப்பித்திருக்க வேண்டும்.
குடும்ப
ஆண்டு உச்ச வருமானம்
ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க
வேண்டும்.விண்ணப்பதாரர் எந்த
ஒரு கல்வி நிலையத்திலும் முழுநேர மாணவராக இருக்க
கூடாது. இத்திட்டத்தின் கீழ்
ஏற்கனவே மூன்றாண்டுகள் பயனடைந்த
பயனாளியாகவும் இருக்க
கூடாது. அரசு மற்றும்
தனியார் துறையிலோ அல்லது
சுய வேைலவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரி
கல்வியினை முழுவதுமாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும்
அல்லது பெற்றோர், கணவர்,
மனைவி மற்றும் பாதுகாவலர் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்
தமிழ்நாட்டில் குடியிருத்தல் வேண்டும். இத்தகைய தகுதியுள்ள பதிவுதாரர்கள், இதுவரை
விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004 என்ற எண்ணை
தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


