டேராடூன் மிலிட்டரி
கல்லூரியில் சேர அழைப்பு
டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன்
மிலிட்டரி கல்லுாரியில் ஜன.,
23ல் துவங்கும் எட்டாம்
வகுப்பு சேர்க்கைக்கு தகுதி
தேர்வு வரும் ஜூன்,
4ல் நடக்க உள்ளது.தற்போது
ஏழாம் வகுப்பு தேறிய,
படித்து கொண்டிருக்கும் மாணவ,
மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
விபர
கையேடு, முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தியும், இணைய
வழியிலும் www.rimc.gov.in மூலம் பெறலாம்.விலாசத்தை
ஆங்கிலத்தில் பெரிய
எழுத்தில் எழுதி, பொதுப்பிரிவினர் விரைவு தபாலில் பெற
கட்டணமாக, 600 ரூபாய், எஸ்.சி.,
– எஸ்.டி., பிரிவினர்,
555 ரூபாய் ஜாதிச்சான்றுடன், ‘THE COMMANDANT
RIMC, DEHRADUN’ என்ற பெயரில், ‘DRAWEE BRANCH,
STATE BANK OF INDIA, TEL BHAVAN BRANCH, DEHRADUN, BANK CODE-01576, UTTARAKHAND’ல்
மாற்றத்தக்க வரைவோலையாக அனுப்ப
வேண்டும்.
THE COMMANDANT,
RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT, DEHRADUN, UTTRAKHAND–248003′ என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.டேராடூனில் பெறப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து, ‘தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணைய
சாலை, பூங்கா நகர்,
சென்னை – 600003 என்ற
முகவரிக்கு வரும், 25 மாலை,
5.45 மணிக்குள் அனுப்பி வைக்க
வேண்டும்.
கூடுதல்
விபரங்களுக்கு ஈரோடு
மாவட்ட முன்னாள் படைவீரர்
நல துணை இயக்குனர்
அலுவலகத்தை, 0424-2263227 என்ற எண்ணில்
அறியலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


