HomeBlogபோட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ரூ.10 கோடியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்

போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ரூ.10 கோடியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்

10 crore graduates will be given special training at a cost of Rs. 10 crore to prepare for the competitive examinations

போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ரூ.10 கோடியில் சிறப்பு
பயிற்சி அளிக்கப்படும்

அரசு
வேலைவாய்ப்புக்கான போட்டித்
தேர்வுகளுக்கு தயார்படுத்த 10 ஆயிரம்ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரிகளுக்கு ரூ.10
கோடி செலவில் சிறப்பு
பயிற்சி அளிக்கப்படும் என்று
அமைச்சர் என்.கயல்விழி
செல்வராஜ் அறிவித்தார்.

சட்டப்பேரவையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
இதில் உறுப்பினர்களின் பல்வேறு
கோரிக்கைகள், கேள்விகளுக்கு துறை
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
பதில் அளித்துப் பேசியதாவது:

அரசு
துறைகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு காலி
பணியிடங்கள் (பேக்லாக் வேகன்சி)
கண்டறியப்பட்டு அவற்றை
நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

நடப்பு
கல்வி ஆண்டில் ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் கலந்தாய்வு மூலம் 1,070 ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் உள்ள
452
ஆசிரியர் காலியிடங்களை ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம்
நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

துரித
மின்இணைப்பு திட்டத்தின் (தத்கால்)
கீழ் 1,000 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மின்இணைப்பு பெற 90 சதவீதம் மானியம்
வழங்குவதற்காக ரூ.23.23
கோடி வழங்கப்படும்.

வீடு
இல்லாத தூய்மை பணியாளர்
நலவாரிய உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வாங்க
ரூ.55 கோடி மானியம்
வழங்கப்படும்.

அரசு
மற்றும் அரசு உதவி
பெறும் கல்லூரிகளில் இளநிலை,
முதுநிலை பட்டப் படிப்புகள் படித்து வரும் 7,600 ஆதிதிராவிடர் மாணவர்கள், 2,400 பழங்குடியின மாணவர்கள்
என 10 ஆயிரம் பேருக்கு
வேலைவாய்ப்பு போட்டித்
தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பு
பயிற்சிகள் அளிக்கப்படும். மொழித்திறன், திறனறித் தேர்வுகள், குழு
விவாதம் ஆகியவற்றில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வாயிலாக
ரூ.10 கோடி செலவில்
அந்த பயிற்சிகள் நடத்தப்படும்.

2 ஆயிரம்
ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.50 கோடி செலவில்
மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.

நிலமற்ற
200
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு நிலம்
வாங்க ரூ.10 கோடி
மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்
துறையின் கீழ் இயங்கும்
6
மேல்நிலைப் பள்ளிகள் ரூ.16.26
கோடி செலவில் மாதிரி
பள்ளிகளாக (மாடல் ஸ்கூல்)
தரம் உயர்த்தப்படும்.

தாட்கோ
பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 500 ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.7.50 கோடியில்
கறவை மாடுகள் வாங்க
ரூ.2.25 கோடி மானியம்
வழங்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பொருளாதார
மேம்பாட்டுத் திட்டத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து
ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.

இதர
நலவாரியங்களில் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக
தமிழ்நாடு புதிரை வண்ணார்
நல வாரியம்,பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகள்
உயர்த்தி வழங்கப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!