மானிய விலையில்
குறுவை விதைநெல் வாங்கலாம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான
விதைநெல் ரகங்கள் மானிய
விலையில் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என சீர்காழி
வேளாண் உதவி இயக்குனர்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சீர்காழி
வட்டாரத்தில் குறுவை
சாகுபடிக்கு உகந்த ரகங்களான
ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடுதுறை
53, கோ 51, அம்பை 16 ஆகிய
குறுகிய கால நெல்
ரகங்கள் நன்கு முளைப்புத்திறனுடன், கலவன்கள் இல்லாத,
அரசு சான்று பெற்ற
விதைகள் சீர்காழி, வைதீஸ்வரன் கோயில், காரைமேடு மற்றும்
திருவெண்காடு வேளாண்மை
விரிவாக்க மையங்களில் தேவையான
அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய
விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
குறுவை
சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்
விரிவாக்க மையங்களில் மானிய
விலையில் குறுவை நெல்
விதைகளை வாங்கி பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


