நூலகத்தில் (டிஜிட்டல்
லைப்ரரி) சிறுவா்களுக்கு கோடைக்
காலப் பயிற்சி – ஈரோடு
ஈரோடு,
சம்பத் நகா் நவீன
நூலகத்தில் (டிஜிட்டல் லைப்ரரி)
சிறுவா்களுக்கான கோடைக்காலப் பயிற்சி முகாம் நடைபெற்று
வருகிறது.
சிறுவா்
வாசக வட்டத்தின் சார்பில்
ஈரோடு ஜேசிஐயுடன் இணைந்து
கடந்த 4ஆம் தேதி
முதல் மே 31ஆம்
தேதி வரை இக்கோடைக்
காலப் பயிற்சி முகாம்
நடத்தப்படுகிறது.
நூலகத்தின் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை தவிர்த்து தினமும் காலை
10.30 மணி முதல் பகல்
1 மணி வரை பல்வேறு
பயிற்சியாளா்களைக் கொண்டு
சிறுவா், சிறுமிகளுக்குப் பல்வேறு
பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி
தினம் ஒரு பயிற்சியாக கதை சொல்லல், ஒரிகாமி,
நடனத்துடன் யோகா, விநாடி
–வினா, பறவைகள் அறிவோம்,
சுய முன்னேற்ற விளையாட்டுகள், கண்ணாடி ஓவியம், கதை
எழுதுதல், நாடகம், வாசித்தல்
உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கோடை
விடுமுறையை பயனுள்ள வகையில்
கழித்திடும் வகையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வளா்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என
மாவட்ட நூலக அலுவலா்
மாதேஸ்வரன் மற்றும் நவீன
நூலகத்தின் நூலகா் ஷீலா
ஆகியோர் தெரிவித்தனா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20-%20%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81.jpg)