ITI., தேர்ச்சி
பெற்றவர்களுக்கு 10,
12ம் வகுப்பிற்கு இணையான
சான்றிதழ் வழங்கப்படும்
தமிழக
தொழிலாளர் நலன் – திறன்
மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும்
திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினைத் தொடரும்
பொருட்டு, 10ம் வகுப்பு
மற்றும் 12ம் வகுப்புச்
சான்றிதழ்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப்
பூர்த்தி செய்யும் பொருட்டு,
8ம் வகுப்பு பயின்று
ஐ.டி.ஐ.
எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2 ஆண்டுகள் தொழிற்படிப்பில் தேசிய
தொழில் சான்றிதழ் பெற்றவர்களுக்கும், 8ம் வகுப்பு
பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய
தொழிற்சான்றிதழும் மற்றும்
ஓராண்டு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் ஒருங்கே பெற்றவர்களுக்கு 10ம் வகுப்புக்கு இணையான
சான்றிதழ் வழங்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே
போல் 10-ம் வகுப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ.
படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான
கல்விச்சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
அறிவிப்பின் மூலமாக ஐ.டி.ஐ.
தேர்ச்சி பெற்றவர்கள் இனி
குரூப் 4 உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எழுதவும், 11ம்
வகுப்பு மற்றும் உயர்கல்வி
ஆகியவற்றில் சேர்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


