டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி
போட்டித் தேர்வுகளுக்கு இலவசப்
பயிற்சி முகாம்
டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவ
பயிற்சி முகாம் திருச்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே
22) நடைபெறவுள்ளது.
கிங்
மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி
தனியார் தமிழ் செய்தி
தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து கோவை, சேலத்தை
தொடா்ந்து திருச்சியில் இந்தப்
பயிற்சி முகாம் நடைபெறுகிறது. முகாமில் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி மற்றும் ஆலோசனைகள்
வழங்கப்படும். அரசு
அதிகாரிகள், போட்டித் தேர்வில்
அனுபவம் மிக்க வல்லுநா்கள் ஆலோசனைகள் வழங்கவுள்ளனா்.
திருச்சியில் கருமண்டபம், எல்ஐசி அலுவலகம்
எதிரேயுள்ள தேசியக் கல்லூரியில் வரும் காலை 9 மணிக்கு
தொடங்கும் முகாமில் மாவட்டக்
காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமார், வருமான வரித்துறை கூடுதல்
ஆணையா் நந்தகுமார், கிங்
மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிர்வாக இயக்குநா் சத்ய
ஸ்ரீ பூமிநாதன் ஆகியோர்
சிறப்புரையாற்றவுள்ளனா்.
முகாமில்
பங்கேற்கும் மாணவா்களுக்கு பாடத்
திட்டம் மற்றும் கடந்தாண்டு கேட்கப்பட்ட வினாத் தொகுப்புகள் அடங்கிய கையேடுகள் வழங்கப்படும். பங்கேற்க 9444227273 என்ற எண்ணைத்
தொடா்பு கொண்டு முன்பதிவு
செய்யலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


