வேளாண் பல்கலையில் மதிப்பு
கூட்டப்பட்ட உணவுப் பொருள்
தயாரிக்கும் பயிற்சி
கோவையில்
உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறு
தானியங்களில் இருந்து
மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்
பொருள் தயாரிக்கும் பயிற்சி
நடைபெறுகிறது.
ஜூன்
1, 2ம் தேதிகளில் நடைபெறும்
இந்த பயிற்சியில், கேழ்வரகு,
கம்பு, சோளம், சாமை,
தினை, பனிவரகு போன்ற
சிறுதானியங்களில் இருந்து
பாரம்பரிய உணவுகள், பிழிதல்,
அடுமனைப் பொருள்கள், உடனடி
தயார்நிலை உணவுகள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார்
தொழில்நுட்ப மையத்தில் இந்த
பயிற்சி நடைபெற இருப்பதாகவும், இது தொடா்பான மேலும்
விவரங்களுக்கு 0422 6611268
என்ற எண்ணில் தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


