TAMIL MIXER EDUCATION- ன் கல்வி செய்திகள்
மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, CBSE முடிவுகள் வெளியான பிறகு,
அடுத்த 5 நாட்களுக்கு நீட்டிக்கப்படும்
பொறியியல்,
கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி CBSE
முடிவுகள் வெளியான பிறகு,
அடுத்த 5 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
பொறியியல்
சேர்க்கைக்கு 42,716 பேர்
இன்று வரை விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். ஜூலை
கடைசியில் CBSE ரிசல்ட்
வரும் என்று சொல்லுகிறார்கள்.
இவ்வளவு
தாமதம் ஆனால் மாணவர்
சேர்க்கைக்கு தாமதம்
ஏற்படும். CBSE தேர்வு
முடிவுகள் வந்த பின்னர்
அடுத்த 5 நாட்களுக்கு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு செய்ய
நாட்கள் நீட்டிக்கப்படும்.
ஆனால்,
கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டது. இதற்காகத்தான் நாங்கள்
மாநில கொள்கையின் அடிப்படையில் கல்வி இருக்க வேண்டும்
என்று கூறுகிறோம்.
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஜூலை
8ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். இந்த
ஆண்டு ஒன்றரை லட்சம்
பொறியியல் காலியிடங்கள் உள்ளது.
பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு
பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறை இந்த ஆண்டு
முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


