TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி செய்திகள்
அரசு தொழிற்பயிற்சி மாணவா் சேர்க்கைக்கு ஜூலை
20ம் தேதி விண்ணப்பிக்கலாம்
– நாகை
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகப்பட்டினம், திருக்குவளை, செம்போடை அரசு
தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்களுக்கும், தனியார்
தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களிலும் சேர்ந்து
பயில விரும்பும் மாணவ,
மாணவியா் இணையதளம் மூலம்
ஜூலை 20ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவா்
சேர்க்கையையொட்டி, அரசு
தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்டத் திறன் பயிற்சி
அலுவலகம் ஆகிய இடங்களில்
உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் உள்ள
விளக்கக் கையேட்டை மாணவா்கள்
கவனமாக பூா்த்தி செய்து
விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை
20ம் தேதிக்குப் பின்னரே
தரவரிசைப் பட்டியல் மற்றும்
கலந்தாய்வு குறித்த விவரங்கள்
வெளியிடப்படும். மேலும்
விவரங்களுக்கு 04365 250129
என்ற தொலைபேசி எண்ணில்
தொடா்பு
கொள்ளளாம் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


