TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்
தமிழகத்தில் 8,462 தற்காலிக
ஆசிரியர் பணியிடங்கள் மேலும்
மூன்றாண்டுக்கு நீட்டிப்பு
தமிழகத்தில் 8,462 தற்காலிக ஆசிரியர்
பணியிடங்கள் மேலும் மூன்றாண்டுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,
தமிழகத்தில் 2011 -2012 ஆம் ஆண்டில்
அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும்
மேல்நிலை பள்ளிகள் என
மொத்தம் 8,462 தற்காலிக ஆசிரியர்
பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு
வரை தற்காலிக தொடர்
நீட்டிப்பு செய்து ஆணை
வெளியிடப்பட்டது.
இந்த
பணியிடங்களுக்கான தற்காலிக
நீட்டிப்பு 2021ம் ஆண்டு
டிசம்பர் 31ம் தேதியுடன்
முடிவடைந்தது இந்த
பணியிடங்களுக்கு 2022ம்
ஆண்டு ஜனவரி 1 முதல்
2024ம் ஆண்டு டிசம்பர்
31 வரை தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி
ஆணையர் அரசை வலியுறுத்தினார்.
இந்நிலையில் 8,462 தற்காலிக பணியிடங்களுக்கு 2024ம் ஆண்டு டிசம்பர்
3ம் தேதி வரை
மூன்றாண்டுகளுக்கு அல்லது
தற்காலிக பணியிடங்களுக்கான தேவை
குறித்து நிதி துறையின்
மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணையிடப்படுகிறது என்று
உத்தரவிடப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


