TAMIL MIXER EDUCATION-ன் UGC NET செய்திகள்
காந்திகிராம பல்கலையில் NET தேர்வுக்கு இலவசப் பயிற்சி
இதுகுறித்து காந்திகிராம கிராமியப் பல்கலை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:
பல்கலை
மானியக் குழுவின் தகுதித்
தேர்வு பயிற்சி மையத்தின்
சார்பில் உதவிப் பேராசிரியா் தேசியத் தகுதித் தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட அல்லது சிறுபான்மையினா் மாணவா்களுக்காக நடத்தப்படும் இந்த
பயிற்சி வகுப்புகள் காந்திகிராம கிராமியப் பல்கலையில் ஜூலை
4 முதல் 6ம் தேதி
வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளன.
தாள்
1 மற்றும் 2க்கான பயிற்சி
வகுப்புகள் காலை 9.30 முதல்
மாலை 4.30 மணி வரை
பாட வல்லுநா்களைக் கொண்டு
நடத்தப்பெறும். பயிற்சி
வகுப்புகள் முழுவதும் இலவமாக
நடத்தப்படும். இதில்
பங்கேற்க விரும்புவோர், தமிழ்
மற்றும் இந்திய மொழிகள்
பள்ளியின் புலமுதன்மையரிடம் தங்கள்
பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.
கூடுதல்
விவரங்களுக்கு முனைவா்
பட்ட ஆய்வாளா் தி.தமிழ்ச்செல்வனை 89400 11376 என்ற எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


