TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி செய்திகள்
அனுமதி இல்லாத
கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு மீண்டும்
வாய்ப்பு
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நகர்
ஊரமைப்பு இயக்ககத்தின் (டிடிபிசி)
எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011ம் ஆண்டுக்கு
முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக்
கட்டிடங்களுக்கு இசைவு
வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு
நெறிமுறைகள் கடந்த 2018ம்
ஆண்டில் வெளியிடப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் ஆறு
மாத காலம் கால
நீட்டிப்பு வழங்கி தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே,
இத்திட்டத்தின் கீழ்
விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற
இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இது
ஒரு முறை மட்டுமே
வழங்கப்படும் அரிய
வாய்ப்பு என்பதால் இதனை
தவறாது பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


