TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC தேர்வு
வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது
– கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்
அருகேயுள்ள தனியார் பள்ளியில்
நடைபெறவிருந்த TNPSC
தேர்வு வேறு பள்ளிக்கு
மாற்றப்பட்டுள்ளது.
இந்தப்
பள்ளியில் ஆய்வு செய்து,
வகுப்பறைகள் உபயோகப்படுத்தும் நிலையில்
இல்லை என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் வரும்
ஞாயிறன்று நடக்கவிருக்கும் TNPSC
Group 4 தேர்வு மையம்
வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்
அருகே கனியாமூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நடந்த
வன்முறையால் TNPSC தேர்வு
மையமாக உள்ள அந்தப்
பள்ளியில் TNPSC தேர்வை
நடத்த இயலாத சூழல்
ஏற்பட்டுள்ளது.
இந்தப்
பள்ளியில் ஆய்வு செய்து,
வகுப்பறைகள் உபயோகப்படுத்தும் நிலையில்
இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட
நிர்வாகம் சார்பில் முக்கிய
அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் மூலம் குரூப்
4 பதவிகளுக்கான எழுத்துத்
தேர்வு எதிர்வரும் ஜூலை
24ம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்தேர்வினை கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டங்களை மையங்களாகக் கொண்டு மொத்தம் 42,600 விண்ணப்பதாரர்கள் 143 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் 3401-கள்ளக்குறிச்சி தேர்வு
மையத்திற்குட்பட்ட தேர்வுக்
கூடம் எண்:- 043, 044, 045,
046 – கனியாமூர், சக்தி மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளியில் தேர்வு
எழுத 1200 தேர்வர்களுக்கு தேர்வாணையத்தால் பட்டியல் இறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சக்தி
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
மாணவி இறந்ததையடுத்து ஏற்பட்ட
சட்டம் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக தேர்வு நடத்துவதற்கான சூழல் இல்லாததால், மேற்படி
1200 தேர்வர்களுக்கு மட்டும்
தேர்வு மையம் மாற்றப்படுகிறது.
மாற்று
இடமாக கள்ளக்குறிச்சி வட்டம்,
நீலமங்கலம் ஏ.கே.டி.
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
900 தேர்வர்கள் மற்றும் ஏ.கே.டி.
நினைவு வித்யா சாகத்
பள்ளி (CBSE)யில்
300 தேர்வர்கள் தேர்வு எழுத
தேர்வறைகள் ஒதுக்கீடு செய்து
புதிய ஹால்டிக்கெட் தேர்வாணையத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என
குரூப் 4 தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
NOTIFICATION: CLICK
HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


