TAMIL MIXER EDUCATION.ன்
TN TET செய்திகள்
TET விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளுவதற்கான வழிமுறைகள்
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள
பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வருகிறது.
ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று,
ஆசிரியர் தகுதித் தேர்வு
தாள் 1 மற்றும் தாள் II (TN TET Paper I
and Paper II) க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என ஏற்கனவே
தெரிவிக்கப்பட்டு, சில
தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது
ஆசிரியர் தகுதித் தேர்வு
தாள் 1 மற்றும் தாள் II (TNTET Paper I
and Paper II) க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள
விரும்பினால் 24.07.2022 முதல் 27.07.2022 வரை
திருத்தம் செய்ய
ஆசிரியர் தேர்வு
வாரிய ஒணையதளத்தில் வழிவகை
செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர்
தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள
அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வு
வாரியம் எந்த
நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தங்கள் மேற்கொள்ளுவதற்கான வழிமுறைகள்:
- விண்ணப்பதாரர்கள் விவரங்களைப் புதுப்பித்தவுடன் முன்பக்கத்திலுள்ள சமர்ப்பி (Submit) Button.னை அழுத்தி
செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி
செய்ய வேண்டும். அவ்வாறு
செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. - சமர்ப்பி (Submit) பொத்தானை
அழுத்தி, உறுதி செய்யவில்லை எனில் முந்தைய விவரங்கள் மட்டுமே
பரிசீலிக்கப்படும். - விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து பணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் மாற்றங்களைச் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின் அதில் மேலும் மாற்றங்களைச் செய்யக் கூடாது.
எனவ, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் மீளவும் சரிபார்த்துக் கொள்ளவும். - விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே
பரிசீலிக்கப்படும். - விண்ணப்பதாரர்கள் கைபேசி
எண் (Mobile Number) மின்னஞ்சல் முகவரி (Email ID) மற்றும் கல்வித்தகுதி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் 1, தாள் II ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய
இயலாது.
Edit Option for Application: Click Here
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here