வாட்ஸ்அப் செயலியில் அதன் பயனர்கள் வாக்கெடுப்பு நடத்தும் அம்சம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ்அப் அப்டேட்களை தீவிரமாக கவனித்து வரும் Wa பீட்டா இன்போ தளம் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் வாட்ஸ்அப் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தும் அம்சம் வெளியாக உள்ளதாக தெரிகிறது.
வாட்ஸ்அப்பில் வாக்கெடுப்பு!
இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தாங்கள் சார்ந்துள்ள குழு உறுப்பினார்களுடன் வாக்கெடுப்பு நடத்த முடியுமாம். அதிகபட்சமாக 12 ஆப்ஷன்களை அதில் வழங்க முடியுமாம். விடுமுறைக்கு எங்கு செல்லலாம், வீட்டில் என்ன உணவு சமைக்கலாம் உட்பட சுவாரஸ்யமான முறையில் இந்த வாக்கெடுப்பை பயனர்கள் நடத்தி, அதன் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். இதுதவிர இன்னும் சில அம்சங்களை கொண்டுவர வாட்ஸ்அப் ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


