HomeBlogஅடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்ப்பு

அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்ப்பு

Inclusion of women in Agnibad scheme from next year

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்ப்பு

இந்திய விமானப்படையில்
அடுத்த
ஆண்டு
முதல்
அக்னிபாத்
திட்டத்தில்
மகளிர்
சேர்க்கப்பட
உள்ளதாக
விமானப்படைத்
தளபதி
வி.ஆர். சவுத்திரி அறிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை தினம், விமானப்படைத்
தளபதி
வி.ஆர். சவுத்திரி தலைமையில் சண்டிகரில் இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில்
பங்கேற்று
உரையாற்றிய
விமானப்
படைத்
தளபதி,
இந்திய
விமானப்படை
அதிகாரிகளின்
நீண்ட
நாள்
கோரிக்கையான
ஆயுத
பிரிவு
தொடங்கப்பட்டுள்ளதாகக்
கூறினார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இப்போது தான் இந்த பிரிவு தொடங்கப்படுவதாகவும்,
மத்திய
அரசு
இப்போது
தான்
இதற்கு
அனுமதி
அளித்துள்ளதாகவும்
வி.ஆர். சவுத்ரி தெரிவித்தார்.

இந்த பிரிவு அனைத்து வகையான நவீன ஆயுதங்களைக் கையாளும் என்றும் அதன் மூலம் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் தெரிவித்தார்.அக்னிபாத் திட்டத்திற்காகவே
பயிற்சி
முறைகளை
விமானப்படையில்
மாற்றி
அமைத்துள்ளதாகவும்,
வீரர்களுக்கு
உரிய
பயிற்சியும்,
திறனும்,
அறிவும்
கிடைக்க
நடவடிக்கை
எடுத்து
வருவதாகவும்
தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ், பயிற்சிக்காக
3
ஆயிரம்
வீரர்கள்
சேர்க்கப்பட
உள்ளதாக
அவர்
கூறினார். 

வருங்காலங்களில்
விமானப்படையில்
அக்னிவீரர்களின்
எண்ணிக்கை
படிப்படியாக
உயர்த்தப்படும்
என்றும்
வி.ஆர். சவுத்ரி தெரிவித்தார்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு முதல் மகளிரும் விமானப்படையில்
சேர்க்கப்பட
உள்ளதாக
விமானப்படைத்
தளபதி
வி.ஆர். சவுத்ரி தெரிவித்தார்.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு
நாடு
முழுவதும்
முதலில்
பரவலாக
எதிர்ப்பு
எழுந்தாலும்,
எதிர்க்கட்சிகளும்
திட்டத்தில்
சில
குறைகள்
இருப்பதாக
கூறினாலும்,
அத்திட்டத்தில்
சேருவதற்கு
லட்சக்கணக்கில்
இளைஞர்கள்
விண்ணப்பித்திருப்பது
குறிப்பிடத்தக்கது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!