TAMIL MIXER
EDUCATION.ன்
TN TET செய்திகள்
1,021 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு
அரசு மருத்துவமனைகளில்
காலியாக
உள்ள
1,021 உதவி
மருத்துவா்
பணியிடங்களுக்கு
எம்.பி.பி.எஸ். பயின்ற மருத்துவா்கள்
விண்ணப்பிக்கலாம்
என்று
மருத்துவப்
பணியாளா்
தோவு
வாரியம்
தெரிவித்தது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில்
1,021 மருத்துவா்கள்
மற்றும்
செவிலியா்கள்,
மருந்தாளுநா்கள்,
தொழில்நுட்பநா்கள்
என
4,308 பணியிடங்கள்
காலியாகவுள்ளன.
இந்த பணியிடங்கள் அனைத்தும் மருத்துவப் பணியாளா் தோவு வாரியம் (MRB) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக
889 மருந்தாளுநா்களை
நிரப்பும்
பணி
நடைபெற்று
வருகிறது.
இந்நிலையில், 1,021 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை
மருத்துவப்
பணியாளா்
தோவு
வாரியம்
செவ்வாய்க்கிழமை
வெளியிட்டது.
அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில்
1,021 உதவி
மருத்துவா்
காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளன.
அதில்,
அனைத்து
சமூக
பிரிவுகளிலும்
உள்ள
மாற்றுத்திறனாளிகளுக்கு
74 இடங்களும்,
எஸ்டி
பிரிவினருக்கு
4 இடங்களும்
ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு
விண்ணப்பிப்பது
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில்
செவ்வாய்க்கிழமை
தொடங்கியது.
வரும்
25ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்.
கணினி வழி எழுத்துத் தோவு நவம்பா் மாதம் நடைபெறும். தோவு தேதி பின்னா் அறிவிக்கப்படும்.
எஸ்சி,
எஸ்சி
(அருந்ததியா்),
எஸ்டி,
மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.500-ம், மற்றவா்களுக்கு
ரூ.1,000-ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு, ஊதியம், இணையவழியே விண்ணப்பிக்கும்
வழிமுறை
உள்ளிட்ட
அனைத்து
விவரங்களையும்
இணையதளத்தைப்
பார்த்து
தெரிந்து
கொள்ளலாம்.