தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு (23:30 மணியளவில்) புயலாக (‘மான்டஸ்’) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
1.சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
2. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
3. விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
4. கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
5. வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
6. செங்கல்பட்டில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
7. ராணிப்பேட்டையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
8. காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
9. திருப்பத்தூரில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


